loader
இந்திய ஆய்வியல் துறைக்கு 3 லட்சம் வெள்ளி நிதி! டான்ஸ்ரீ சோமா அறவாரியம் வழங்கியது!

இந்திய ஆய்வியல் துறைக்கு 3 லட்சம் வெள்ளி நிதி! டான்ஸ்ரீ சோமா அறவாரியம் வழங்கியது!

கோலாலம்பூர், ஜூலை 22: மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் மேம்பாட்டிற்காக,  மூன்று லட்சம் ரிங்கிட் நிதி உதவியை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஶ்ரீ கே.ஆர். சோமா அறவாரியம் வழங்கியிருக்கின்றது.

கோவிட்-19 நோய் தாக்கத்தால் பல துறைகள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், கல்வித்துறைக்கு, குறிப்பாக மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் மேம்பாட்டிற்கு இந்த நிதி உதவி முக்கிய பங்காற்றும் என்று என்.எல்.ஃப்.சி.எஸ்-யின் தலைவர் டான் ஶ்ரீ கே. ஆர். சோமசுந்தரம் தெரிவித்தார்.

கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் நடைப்பெற்ற மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைக்கான அற நிதி காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே. ஆர் சோமா அற நிதி, தமிழ் ஆய்வு துறையை வளப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர், இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News