loader
இன்று ஆடி அமாவாசை! முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்கும் முக்கிய நாள்!

இன்று ஆடி அமாவாசை! முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்கும் முக்கிய நாள்!

அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம்.
இன்று ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க முக்கிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை
இவற்றில் ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாளில், சந்திரன் மகிழ்ச்சியாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியை பெறலாம்.

யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது உண்டு. தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம்- அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் விசேஷமானது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை (ஜூலை 20) இன்று ஆகும். ஜூலை 19-ஆம் தேதி இரவு 12.17 மணிக்குத் தொடங்கும் ஆடி அமாவாசை, ஜூலை 20-ஆம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது. அதனால் ஜூலை 20-ஆம் தேதி காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நேரம் என நம்பப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News