loader
இந்தியாவில் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்!

இந்தியாவில் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்!

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடி உடன் சுந்தர் பிச்சை உரையாடினார். அப்போது, தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

சுமார் 2.6 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிஸினஸ்-க்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News