loader
நாட்டில் 7 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

நாட்டில் 7 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

கோலாலம்பூர் : ஜூலை 13:  கொரோனா கிருமித் தொற்றின் காரணமாக நாட்டில்  வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுவது குறித்து, செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்டால் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மொகைதீன் யாசின், உலகளவில் இந்த வேலையில்லா பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், மலேசியாவில் தற்போது இதன் விகிதம், 5 விழுக்காடு அல்லது ஏழு லட்சத்து 720 ஆயிரம் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், இது எட்டு லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்றாலும், அரசாங்கம் கொரோனா கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊதிய மானியம், ஊதிய செலவினங்கள் மற்றும் வங்கி கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் உள்ள வங்கிகள் இதற்கு 10 ஆயிரம் கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளன. இது, நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, வேலை வாய்ப்பை வழங்கவும் வேலையில்லா பிரச்சனை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் வாய்ப்பளிக்கிறது என்று மொகைதீன்  யாசின் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News