loader
சிங்கப்பூர் எல்லை மூடல்! பெரும்பாலான மலேசியர்களுக்கு வேலை.இழப்பு!

சிங்கப்பூர் எல்லை மூடல்! பெரும்பாலான மலேசியர்களுக்கு வேலை.இழப்பு!

ஜோகூர் பாரு: கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூர் தனது எல்லைப் பகுதியை மூடியதால், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மலேசியர்களில் பெரும்பாலானோர், தங்களின் வேலையை இழந்திருக்கின்றனர்.  இதனால், அவர்கள் மிகப் பெரிய பொருளாதாரச் சுமையை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, நிலைமை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பும் வரையில், அவர்களுக்குத் தற்காலிக வேலை வாய்ப்புகள் உட்பட, சில உதவிகளை மாநில அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரி, ஜோகூர்  மாநில மந்திரி பெசாரிடம் மகஜர் ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் அமல்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபி காலக்கட்டத்தில், வேலையிழந்த மலேசியர்கள் தங்களின் அன்றாடச் செலவீனங்களைச் சமாளிப்பதற்காக, அவர்களின் சேமிப்புகளை பயன்படுத்தியதாக அரசாங்க சார்பற்ற இயக்கத்தின் தலைவர் தாயாளன் ஶ்ரீபாலன் தெரிவித்திருக்கிறார்.

எனினும், தற்போது பள்ளி தவணையும் தொடங்கவிருப்பதைத் தொடர்ந்து, அச்சேமிப்பு போதுமானதாக இல்லாததால், அரசாங்கம் அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று தாயாளன் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூரில் வேலையிழந்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்நோக்கி வரும் பிரச்சனைக்கு மாநில அரசாங்கம் விரைவில் தீர்வு காணும் என்பதே மக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது!

0 Comments

leave a reply

Recent News