loader
25 நாட்களுக்குப் பிறகு ஒரு மரணம்!

25 நாட்களுக்குப் பிறகு ஒரு மரணம்!

25 நாட்களுக்குப் பிறகு கோவிட்-19 நோயினால் நாட்டில் இன்று ஒரு மரணச் சம்பவம் பதிவாகி இருக்கிறது.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து, நாட்டில் மொத்தம் 122 பேர்  உயிரிழந்திருப்பதாக, சுகாதாரத் துறை தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இறந்தவர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 72 வயதுடைய மலேசியர் ஆவார்.

இந்நிலையில், நாட்டில் இன்று நண்பகல் வரை 8 புதிய கோவிட் 19 நோய் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,704 ஆக அதிகரித்து இருக்கிறது.  அதில், நான்கு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை உட்படுத்தியதாகும் என்றும், எஞ்சிய நான்கு சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், கோவிட்-19 நோயாளிகளில் இன்று 4  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்!

0 Comments

leave a reply

Recent News