loader
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல்! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விஷயத்தில், உலக சுகாதார மைப்பு, சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அறிவித்தார்.

அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும், அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பின் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த  நிதியை நிறுத்தினார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியா குத்ரசிற்கு கடந்த 6-ஆம் தேதி அனுப்பிய கடிதத்ததில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News