loader
பெர்கேசாவின் நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக மேற்கொள்ளப்படுகிறது! இடைத் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்!

பெர்கேசாவின் நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக மேற்கொள்ளப்படுகிறது! இடைத் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்!

ஜாலான் அம்பாங், ஜூலை 8

தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் தரகராகத் தங்களைச் சித்தரித்துக்கொள்ளும் தரப்பினரிடம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பெர்கேசோவுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் பெர்கேசோ நியமிக்கவில்லை என்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் முஹமட் தெரிவித்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை, 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பெர்கேசோ நிதியை ஏமாற்றிய கும்பலின் பின்னணியில் இருந்து செய்ல்பட்டதாக நம்பப்படும் மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்திருந்தது.

இந்நிலையில் நிதி கோரும் போது ஏமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 15,000 வெள்ளியிலிருந்து 25,000 வெள்ளி வரையில், முன்பணம் கேட்கும் கும்பலிடம் எளிதில் ஏமாறக் கூடாது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

கோலாலம்பூரில் இருக்கும் பெர்கேசோ கட்டிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையில், இரண்டு கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்பிலான 415 போலி நிதி கோரும் விண்ணப்பங்கள் பதிவுச் செய்யப்பட்டிருப்பதாக டாக்டர் முஹமட் அஸ்மான் குறிப்பிட்டார்.

இது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுப்படுவோர் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், shoutout@perkeso.gov.my என்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்!

0 Comments

leave a reply

Recent News