loader
மலேசியாவை அவமதிக்கும் ஆவணப்படம்! அல் ஜசீரா நிருபர் மீது குற்றச்சாட்டு!

மலேசியாவை அவமதிக்கும் ஆவணப்படம்! அல் ஜசீரா நிருபர் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், 7 ஜூலை:

'LOCKED UP IN MALAYSIA'S LOCK DOWN' ன்ற ஆவணப் படத்தை வெளியிட்டது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு, அனைத்துலக செய்தி நிறுவனமான  அல்- ஜஸிராவின் (AL-JAZEERA) நிருபர் மிக விரைவில் அழைக்கப்படுவார்  என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கிடைத்த புகாரின் அடிப்படையில், போலீஸ் மேற்கொள்ளும் விசாரணையில் இது தேசத் துரோகமா அல்லது சட்டவிதிகளை மீறிய செயலா என்பதை தீர்மானிப்பது போலீசின் பொறுப்பாகும் என்றார் அவர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 500 மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233-ரின் கீழ், போலீசார் விசாரணையை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்வர் என்றும் அப்துல் ஹமிட் பாடோர்  குறிப்பிட்டார்.

''LOCKED UP IN MALAYSIA'S LOCK DOWN'' என்ற தலைப்பிலான 25 நிமிடம் 50 வினாடி கொண்ட ஆவணப்படத்தை அல்- ஜஸிரா அண்மையில் வெளியிட்டிருந்தது.

கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளை கொடுமையான முறையில் மலேசியா நடந்துகொண்டதாக அந்த ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News