loader
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள  நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு  தொலைபேசி மூலம்  மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

மிரட்டல் விடுத்த மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News