loader
250 பி.கே.ஆர் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகல்!

250 பி.கே.ஆர் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகல்!

அம்பாங் பி.கே.ஆர் கிளையின் சுமார் 250 உறுப்பினர்கள் பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். இதனால், அம்பாங் பி.கே.ஆர் கிளை உடனடியாக கலைக்கப்படுவதாகஅம்பாங் பி.கே.ஆர் கிளை துணைத் தலைவர் டி. நல்லன் தெரிவித்தார்.

அண்மைய சம்பவங்கள் சாதகமாக இல்லாததால்,  கட்சியை விட்டு வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாங் கிளையின் முன்னாள் தலைவர் ஜுரைடா கமாருதீன், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியுடன் பக்கபலமாக இருந்ததையடுத்து அம்பாங் பி.கே.ஆர் கிளை தள்ளாடிய நிலையில் இருந்தது.

அவ்விருவரும், கட்சியை விட்டு வெளியேறி பி.கே.ஆர் பிரதிநிதிகளாக இருந்தனர். இதனால் தேசிய கூட்டணி, பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மத்திய அரசைக் கைப்பற்றியது.

இந்த நடவடிக்கையினால் கட்சியின் அந்த இரண்டு முன்னாள் தலைவர்களும் பிப்ரவரி 24 அன்று பி.கே.ஆரால் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் நம்பிக்கையை இழந்ததால் உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நல்லன் மேலும் கூறினார்.

பி.கே.ஆர் தலைமைத்துவம், தனிநபர்களின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்றும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியின் (பி.என்) அரசாங்கத்திற்கு அவர்கள் இப்போது ஆதரவளிப்பதாகவும் நல்லன் அறிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News