loader
கள்வனைக் கண்டுபிடி!   நம்ம உள்ளூர்க் கலைஞர்களின் அசத்தல் டிவி தொடர்!

கள்வனைக் கண்டுபிடி! நம்ம உள்ளூர்க் கலைஞர்களின் அசத்தல் டிவி தொடர்!

கோலாலம்பூர் ஜூலை-1

கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் ஆஸ்ட்ரோ வின்மீன்  எச்.டி அலைவரிசை 231-ல் இன்று முதல் (ஜூலை 1) இரவு 9 மணியளவில்  தேடல் வேட்டையோடு அரங்கேற உள்ளது, உள்ளூர்த் தொடரான 'கள்வனைக் கண்டுப்பிடி.

தமிழக டிவி தொடர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நம்ம ரசிகர்களைக் கவர, உள்ளுர்க் கலைஞர்கள் ஆஸ்ட்ரோவோடு கைகோர்க்க ஆயத்தமாகி விட்டனர்.  

நாட்டின் தலைசிறந்த தயாரிப்பு நிறுவனமான  வீடு புரடக்சன்ஸ் விமலா பெருமாள் - டெனிஸ் குமார் 'தமிழ் லெட்சுமி' என்று வானவில்லில் சக்கைப்போடு போட... சவாலுக்கு விண்மீன் எச்.டி யில் இன்று முதல் ஒளியேறுகிறது கள்வனைக் கண்டுப்பிடி தொடர்.

இத்தொடரில் லிங்கேஸ்வரன் மணியம், பாஷினி சிவகுமார், மகேன் விகடகவி, கே.எஸ். மணியம், காந்தீபன்@பென் ஜி, ராஜ் கணேஷ், ரவின் ராவ், சந்திரன், சங்கபாலன், ஆர். மோகன ராஜ், கெ.பி.தி (பி.ஏ) ராமசுந்தரன், சுபாஷினி அசோகன், ரேன்னி மார்ட்டின் மற்றும் சாய் கோகிலா ஆகியோர் நடித்துள்ள நிலையில், 26 அத்தியாயங்கள் கொண்டு இத்தொடர்  ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. திகில், அமானுஷ்யம், காதல், சமூக அக்கறை  என பல கலவையின்  வடிவம் தான் கள்வனைக் கண்டுப்பிடி.

ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்ட பிறகு, உள்ளுர் படைப்புகள் மீதுகூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அதோடு எல்லா வகையிலும் அது தரமாக இருக்கவேண்டும் என்பதில் ஆஸ்ட்ரோ கவனமாக இருக்கிறது.

தமிழ் தொடரை பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதே தரத்தை உள்ளுர் படைப்புகளிலும் எதிர்பார்ப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு  இயக்கம் என்று தரமான இளம் குழுவிடம் பொறுப்பைக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. 

இன்றுதான் கள்வன் வெளிவருகிறான். கதை ஓட்டம் ரசிகர்களைக் கவர்கிறதா என்பதைப் பொறுத்திருந்து கண்டுபிடித்து எழுதுவோம். வாழ்த்துகள்!

0 Comments

leave a reply

Recent News