loader
'தமிழ் லெட்சுமி'-க்காக காத்திருக்கும் ரசிகர்கள்! மக்களின் அபிமானத்தைப் பெற்ற மலேசியாவின் நெடுந்தொடர்!

'தமிழ் லெட்சுமி'-க்காக காத்திருக்கும் ரசிகர்கள்! மக்களின் அபிமானத்தைப் பெற்ற மலேசியாவின் நெடுந்தொடர்!

கோலாலம்பூர் ஜூலை-1

வீடு புரடக்சன்ஸ்  டெனிஸ் குமார் தயாரிப்பில்,  டாக்டர் விமலா பெருமாள் இயக்கத்தில் மூன்று தோழிகளின் இல்லற வாழ்க்கையின் பயணமும் அவர்கள் நட்பின் ஆழமும் கலந்த ஓர் உள்ளுர் தொடராக  தமிழ்லெட்சுமி  அறிமுகமான சிறு தினங்களில் மக்கள் அந்தத் தொடரை விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.  

நம் குடும்பத்தில் நடப்பது போல் ஒரு எதார்த்தம்  டிராமா மொழி நடை  இல்லாமல் இயல்பான அன்றாட மலேசிய மக்கள் பேசும் நடை மக்களை கவர்ந்துள்ளது. ஒளிப்பதிவு  மலேசியத் தொடரை புதிதாக வடிவமைத்துள்ளது.கதை மற்றும் திரைக்கதையில் மக்களை ஈர்க்கும் நடையும் வசனத்தின் எதார்த்தமும் தமிழகத் தொடரைப் பார்க்க காத்திருக்கும் மலேசிய ரசிகர்களை   இப்போது வானவில் அலைவரிசை பக்கம், 9 மணி  தமிழ்லெட்சுமி தொடருக்காக காக்கவைத்துள்ளது. 

அதோடு திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகும் இத்தொடரின் அடுத்த கட்டத்திற்காக, திங்கள் வரை காத்திருக்கின்றனர் மக்கள்.

இது  மலேசியப் படைப்புக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி .

படைப்பு தரமாகவும், மக்களைக் கவரும் வண்ணம் இருந்தால் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்பதற்கு தமிழ் லட்சுமி தொடர் ஓர் உதாரணம்.

ஜாஸ்மின் மைகல், ஹேமா, மூன்நிலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களுடன் பல உள்ளுர்  கலைஞர்கள் கதைக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளனர்.

முன்பு எல்லாம் உள்ளுர்படைப்புகளை மலேசிய ரசிகர்கள்  பார்ப்பது குறைவு என்ற வருத்தமான தகவலைக் கொடுத்த  ஆஸ்ட்ரோ, இப்போத உள்ளுர் படைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து  தரமான படைப்புகளை ஒளிபரப்ப பாடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கும் நமது நன்றி வாழ்த்துக்கள்.

 

தமிழ் லென்ஸ் விடுத்த கோரிக்கைக்கு,  தமிழ் லெட்சுமி தொடர் புதிய சாதனையை படைத்துள்ளது என்ற தகவலை ஆஸ்ட்ரோ நமக்கு வழங்கியுள்ளது. அதோடு இந்தத் தொடருக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கிய  ரசிகர்களுக்கு நன்றியையும் ஆஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.

 

மலேசியக் கலைஞர்களே 'தமிழ்லட்சுமி'யின் வெற்றி  மலேசியக் கலைஞர்களின் வெற்றி.  மலேசியப் படைப்பின், தரத்தின் வெற்றி. இந்த விதை பல உள்ளூர்க் கலைஞர்களின் வாழ்வுக்கு அடைக்கலம் தரும் விருட்சமாக உருவாக தமிழ் லென்ஸ் வாழ்த்துகிறது!

0 Comments

leave a reply

Recent News