loader
1176 மெட்ரிகுலேசன் இடங்கள்  என்பது சாதனை அல்ல; பின்னடைவு!

1176 மெட்ரிகுலேசன் இடங்கள் என்பது சாதனை அல்ல; பின்னடைவு!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை-1

இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு  மெட்ரிகுலேசன் கல்விக்கான இட ஒதுக்கீடு 1176 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது சமுதாயத்திற்கு ஒரு பின்னடைவே தவிர, மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி அல்ல.

டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமைத்துவத்தில்  துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு அந்தக் காலகட்டத்தில் நஜீப்  இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டை ஆண்டு தோறும் முன்னடையச் செய்தார் என்பது நன்கு தெரியும். அவருக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது.

ஆகக் கடைசியாக இந்திய மாணவர்களுக்கு  2200 மெட்ரிகுலேசன் இடங்களைப் பெற்றுத்தந்த நஜீப் மற்றும் ம.இ.கா,   பக்காத்தான் ஆட்சியின் போது, 2200 இட ஒதுக்கீடு நிலைநிறுத்தப்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள்.

மெட்ரிகுலேசன் இடங்கள் அதிகரித்ததும், அதற்கேற்ப இந்திய  மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அப்போதைய அமைச்சர்கள் வாட்டி எடுத்தனர்.

இப்போது  ம.இ.காவைப் பிரதிநிதித்து ஒரே ஒரு முழு அமைச்சர்  அமைச்சரவையில் இருக்கிறார். இந்நிலையில், 1176 இடங்கள்தான் என்பது நியாமான ஒதுக்கீடா? இது டத்தோஸ்ரீ சரவணனுக்குப் புரியும்.
அதனால் அந்த இடங்களை மேலும் அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தை நடத்தப்போவதாகக் கூறியுள்ளார். 

எனவே, சமுதாயத் தலைவர்கள் டத்தோஸ்ரீ சரவணன் பக்கம் நின்று குரல் எழுப்புவதுதான் முறையே தவிர, 1176 போதும் என்பது போல் சந்தோசப்பட்டு  பாராட்டு  மழையில் நனையக்கூடாது.

மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீடு  சந்தோசமான தகவல் அல்ல. அது பின்னடைவு என்பதை சமுதாயத் தலைவர்கள் உணருங்கள். அமைச்சரைக் குஷிப்படுத்த  இப்படி சிறந்த அடைவு என்று சமுதாயத்தை ஏமாற்றாதீர்கள்!

0 Comments

leave a reply

Recent News