loader
1 லிட்டர் சானிடைசர் வெறும் 17 காசு!

1 லிட்டர் சானிடைசர் வெறும் 17 காசு!

நமது நாட்டைப் பொருத்தவரை சானிடைசர் நடுத்தர அளவிற்கு 17 வெள்ளியிலிருந்து 20 வெள்ளி, 25 வெள்ளியாக விற்பனையாகிறது. கையடக்க சானிடைசர்கூட 8 வெள்ளி வரை விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 1 லிட்டர் சானிடைசர் விலை வெறும் 17 காசுதான் என்று அதிரடி காட்டியுள்ளது அரசு.

இந்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் , சாதாரண உப்பைப்  பயன்படுத்தி வைரஸ் தடுப்புக்காக பயன்படுத்தக்கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கிருமிநாசினியைப் பயன்படுத்துவதால் வைரஸ், பாக்டீரியா, டெங்கு கொசு மற்றும் பூஞ்சை ஆகியவற்றை அழிக்க முடிகிறது.

பெரும்பாலும் மருத்துவமனைகள், வீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் கிருமிநாசினிகள் ஆல்கஹால் (ALCOHOL) சேர்த்து உற்பத்தி செய்யப்படுவதால் விரைவில் ஆவியாகி விடுகிறது. அவற்றைக் கொண்டு தரையைச் சுத்தம் செய்வதால் உடல்நலப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கு மாற்று வழியாக இந்த கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று கிராம் கல் உப்பை (சோடியம் குளோரைடு) 100 மி.லி. தண்ணீரில் கரைத்து நேர்மின்வாய் (Anode), எதிர்மின்வாய் (Cathode) பயன்படுத்தி எலக்ட்ரோ கெமிக்கல் முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சும் போது ஒரு மணிநேரத்தில் 50 மி.லி. சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினி கிடைக்கிறது. இந்த முறையில் ஒரு லிட்டர் கிருமிநாசினியை 17 காசுகளில் உற்பத்தி செய்யலாம்.

கல் உப்பை பயன்படுத்தி தயாரிக்கும் கிருமிநாசினியில், நறுமணம் தேவைப்பட்டால் வாசனை திரவியங்களை சேர்த்துக் கொள்ளலாம். குளோரினை தண்ணீரில் கலந்து வீதிகளில் தெளித்து சுத்தம் செய்யும் போது அடர்த்தியான வாயு வெளியேறும். அதே போல், குளோரின் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.

ஆனால் இதில் குளோரின் வாயுவின் பயன்பாடு இல்லாததால் மாசற்ற மற்றும் ஆபத்து இல்லாத ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குகிறது!

0 Comments

leave a reply

Recent News