loader
அரசு ஆலோசகரா? என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! - மகாதீர்

அரசு ஆலோசகரா? என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! - மகாதீர்

மத்திய அரசை மீண்டும் பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றினால், அமைச்சரவையில் சிறப்பு பதவியில் டாக்டர் மகாதீர் நியமிக்கப்படுவார் என்ற பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் யோசனையை துன் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார்.

அன்வார் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரான மகாதீர் அவரது வழிகாட்டியாகவோ அல்லது அரசாங்க ஆலோசகராகவோ நியமிக்கப்படலாம் என்றும் பி.கே.ஆர் வலியுறுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரை அரசாங்க ஆலோசகராக சிங்கப்பூர் நியமித்தது போல் மகாதீரை நியமிக்கலாம் என்று ஆலோசனையும் வழங்கப்பட்டது.

ஆனால், இதற்குப் பதில் அளித்துள்ள மகாதீர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்களான அப்துல்லா அகமட் படாவி, நஜிப் ரசாக் முதல், இப்போது உள்ள பிரதமர் முகிதீன் யாசின் வரை நான் அறிவுரை கூற முயற்சிக்கும்போதெல்லாம் அதை நிராகரிப்பார்கள், அல்லது ஏற்க மறுப்பார்கள் என்று மகாதீர் கூறியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News