loader
கடுமையான நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கடுமையான நடைமுறை!

கடுமையான நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கடுமையான நடைமுறை!

கோவிட்19 தாக்கம் மக்களிடையே அதிகம் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு மருத்துவனைக்கு வருகை தருகிறவர்கள் மற்றும் நோயாளிகளைக் காண்பதற்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்பட்டவர்களை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், தவிர பொது மக்களுக்கு இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும்  சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், அனுமதியுடன் வருபவர்கள் பிள்ளைகளை மருத்துவனைக்கு அழைத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரிசோதனைக்கு வருபவர்கள் மலேசிய சுகாதார அமைச்சின் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஒ.பியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News