loader
சிங்கப்பூர் - புரூணை பிரஜைகள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி!

சிங்கப்பூர் - புரூணை பிரஜைகள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி!

புத்ராஜெயா, 19 ஜூன்  -- சிங்கப்பூர் மற்றும் புரூணை நாட்டு பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தற்காப்புத்துறைஅமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

இரு நாட்டு பிரஜைகளும் நாட்டின் எல்லைப் பகுதியில் நுழைவதற்கு, மலேசிய குடிநுழைவுத் துறையிடம் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

நாட்டிற்குள் நுழையும் சிங்கப்பூர் மற்றும் புரூணை நாட்டு பிரஜைகள், கோவிட்-19 நோய்க்கான மருத்துவ பரிசோதனை செய்வதற்கும், வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கும் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

எனினும்,  இது குறித்து அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சும் விஸ்மா புத்ராவும் இணைந்து பேச்சுகள் நடத்தும் என்றும், மேலும் இரு நாடுகளின் அரசாங்கங்களும் இதே போன்ற தளர்வுகளை மலேசியர்களுக்கு வழங்கினால் மட்டுமே, இந்த அனுமதி அந்நாட்டு பிரஜைகளுக்கும் வழங்கப்படும் என்று அவர் தெளிவுப்படுத்தினார். மருத்துவத்திற்காக நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவர்கள், சுகாதார அமைச்சின் மூலம் மலேசிய சுகாதார சுற்றுலா பராமரிப்பு மன்றத்துடன் பதிந்து கொள்ள வேண்டும்.
அதோடு, சொந்த நாட்டிலும், மலேசியாவிற்குள் நுழைந்தவுடனும் கோவிட்-19 நோய்க்கான மருத்துவ பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்!

0 Comments

leave a reply

Recent News