loader
சிறார்கள் வெளியில் செல்ல அனுமதி!

சிறார்கள் வெளியில் செல்ல அனுமதி!

புத்ராஜெயா, 17 ஜூன் - பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலகட்டத்திலிருந்து சிறுவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில் , விளையாட்டுப் பூங்கா, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வதற்கு, இனி சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு அவர்களின் பெற்றோரும் பாதுகாவலரும் முன்னுரிமை அளிப்பதோடு, எந்நேரமும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகள் வெளியே செல்லலாம். ஆனால் பொழுதுபோக்குப் பகுதிகளில் கூட்டமாக கூட வேண்டாம் என்றும், இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்  என்று அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், பிள்ளைகளைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பதே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் நோய்த் தாக்கத்திற்கு விரைவில் ஆளாகக்கூடும் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், உணவகங்களில் உள்ள மேசை அளவிற்கு ஏற்றாற்போல வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இருந்தபோதிலும், வாடிக்கையாளர்கள் தகுந்த தொடுகை இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதை உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News