loader
ரோஹிங்யா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்! - அமைச்சர் இஸ்மாயில் சப்ரி

ரோஹிங்யா அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்! - அமைச்சர் இஸ்மாயில் சப்ரி

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிற்குள் நுழைந்த ரோஹிங்யா அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் பங்களாதேஷுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

"ரோஹிங்கியா அகதிகள் இங்கு வந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று கருதக்கூடாது" என்று செவ்வாயன்று (ஜூன் 9) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

திங்கள்கிழமை (ஜூன் 9) லங்காவியில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை நாட்டில் தங்க அனுமதிக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.

அகதிகளை காக்ஸ் பஜார் அல்லது பங்களாதேஷின் பசன் சார் தீவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

269 ​​ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வந்த ஒரு கப்பல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததால், லங்காவியில் அந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இஸ்மாயில் சப்ரி இவ்வாறு பதிலளித்தார்!

0 Comments

leave a reply

Recent News