loader
பாதிபேர் கடலில் இறக்க; மீதி உயிர் கரையைக் கடக்க... லங்காவியில் தரையிறங்கிய ரோஹிங்யா அகதிகள்!

பாதிபேர் கடலில் இறக்க; மீதி உயிர் கரையைக் கடக்க... லங்காவியில் தரையிறங்கிய ரோஹிங்யா அகதிகள்!

லங்காவி  ஜூன்-7

மியன்மார் முகாமில் இருந்து தப்பித்து வந்த ரோஹிங்யா அகதிகள் சுமார்  4 மாதங்கள் கடல்வழிப் பயணம் செய்து, நேற்று  அதிகாலை 4 மணி அளவில் லங்காவி பந்தாய் நிபோங் தெபால் பகுதியில் தரையிறங்கியுள்ளனர்.

சுமார் 269 ரோஹிங்யாஅகதிகள் தரையிறங்கியுள்ளதாகவும், இவர்களில் 80 பேர் ஆண்கள் எனவும்,  138 பேர் பெண்கள் எனவும், 26 ஆண் குழந்தைகள் மற்றும் 23 பெண் குழந்தைகள் எனவும் தகவல் கிடைத்துள்ளது. 

அதோடு லங்காவி கரையோரம் ரோஹிங்யா அகதி ஒருவரின் சடலமும் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

500 ரோஹிங்யா அகதிகளை ஏற்றிக்கொண்டு மியன்மாரிலிருந்து  வந்த கப்பலில், நான்கு மாத கடல் பயணத்தின்போது  200 பேர் இறந்ததாகவும், அவர்களில் 269 பேர் உயிருடன் நேற்று லங்காவியில்  தரையிறங்கியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இருப்பினும் இது தொடர்பாக விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அனைத்து அகதிகளும் தற்போது  லங்காவியில் உள்ள உலு மலாக்கா முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News