loader
ஜூன் 1-லிருந்து 3 தமிழ் எச்டி அலைவரிசைகள்!  அறிமுகப்படுத்துகிறது ஆஸ்ட்ரோ!

ஜூன் 1-லிருந்து 3 தமிழ் எச்டி அலைவரிசைகள்! அறிமுகப்படுத்துகிறது ஆஸ்ட்ரோ!

கோலாலம்பூர், 28 மே 2020 – Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235), ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) மற்றும் புதிய, பாப்-ஆப் (pop-up) அலைவரிசை ரஜினி70 எச்டி (அலைவரிசை 100) ஆகிய அலைவரிசைகளின் அறிமுகத்துடன் 1 ஜூன் 2020 முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சியில் அதிக தமிழ் எச்டி உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம். இம்மூன்று அலைவரிசைகள் அறிமுகத்துடன், தற்பொழுது ஆஸ்ட்ரோவில் மொத்தம் 9 இந்திய எச்டி அலைவரிசைகள் உள்ளன. 

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான, சிறந்த உயர்தர பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவதால், ஜூன் 1 முதல் அதிக எச்டி உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) ஆஸ்ட்ரோ மற்றும் NJOI வாடிக்கையாளர்களுக்கு புதிய தொடர்களான தமிழ்லட்சுமி மற்றும் நலம் அறிய ஆவல் உடன் சேர்த்து உள்ளூர் தமிழ் திரைப்படங்கள், டெலிமூவிக்கள், குறும்படங்கள் மற்றும் உள்ளூர் மலையாளம் மற்றும் தெலுங்கு நாடகங்களுடன் சிறந்தக் காட்சி அனுபவத்தை வழங்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி இவ்வாண்டு திரைக்கு வந்து சில மாதங்களேயான தர்பார் வரை எழுபது திரைப்படங்களை பாப்-ஆப் (pop-up) அலைவரிசையான ரஜினி70 எச்டி-இல் (அலைவரிசை  100) 1 முதல் 30 ஜூன் வரை கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகவும் பிரபலமான அலைவரிசைகளில் ஒன்றான Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) சக்ரவர்த்தி பேக்கில் இடம் பெறுகிறது.”

சக்ரவர்த்தி பேக் வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் எச்டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233) ஆகியவற்றுடன் கூடுதலாக Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) இணைவதன் வழி அதிக எச்டி உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம். பிரீமியம் நிகழ்ச்சிகளான ச ரி க ம பா லில் சேம்ப்ஸ் சீசன் 2  மற்றும் காமெடி கேங்ஸ்டர்ஸ்; எழுச்சியூட்டும் பேச்சு நிகழ்ச்சியான, தமிழா தமிழா; பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமையல் நிகழ்ச்சியான, அஞ்சறை பெட்டி; அற்புதமான விளையாட்டு நிகழ்ச்சிகளான ஜீன்ஸ் சீசன் 9 மற்றும் சூப்பர் மாம் சீசன் 2; மற்றும் சிறப்பு விளைவுகள் நிறைந்த காவியங்கள் மற்றும் நாடகங்களான, ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம், இரட்டை ரோஜா  மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) வழங்குகிறது. சக்ரவர்த்தி பேக்கை அண்மையில் எச்டிக்கு மேம்படுத்தியதனால், எஸ்டி அலைவரிகளான ராஜ் டிவி, ஜெயா டிவி மற்றும் கலைஞர் டிவி ஆகியவை இனி இப்பேக்கில் கிடைக்கப்பெறாது.

இந்த எச்டி அலைவரிசைகள் மற்றும் பலவற்றை எச்டி பெட்டியுடன் கண்டு மகிழவும். உங்கள் எச்டி அல்லாத பெட்டியை அலைவரிசை 200 அல்லது 03-9543 3838 வழியாக கூடுதல் கட்டணம் அல்லது ஒப்பந்தம் இன்றி மேம்படுத்தவும். மேல் விவரங்களுக்கு, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்!



 

0 Comments

leave a reply

Recent News