loader
போருக்குத் தயாராகும் சீனா!

போருக்குத் தயாராகும் சீனா!

சீனா போருக்குத் தயாராகும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நெருக்கடியில் உலகம் சிக்கித் தவிக்கும் போது சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6 தேதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்தப் புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தைக் காட்டுகிறது.

இரண்டாவது மே 21-ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமானப் பணிகள் நடப்பதை காணமுடிகிறது.

மூன்றாவது படத்தில், இராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது!

0 Comments

leave a reply

Recent News