loader
நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கமளிக்கையில் விக்னேஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்தாரா? மித்ரா மஇகா-விடம் சிக்கினால் குரங்கு கை பூமாலைதான்! - ஜோகூர் எம்ஏபி தலைவர்  மோகன் எல்லப்பன்

நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கமளிக்கையில் விக்னேஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்தாரா? மித்ரா மஇகா-விடம் சிக்கினால் குரங்கு கை பூமாலைதான்! - ஜோகூர் எம்ஏபி தலைவர் மோகன் எல்லப்பன்

ஜொகூர் பாரு, மே 21: மித்ரா நிதி ஒதுக்கீடு குறித்த அனைத்து விவரங்களையும் அப்போதைய அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நாடாளுமன்றத்தில் விவரித்தபோது மேலவைத் தலைவரும் மஇகா தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்தாரா என்ற ஐயம் எழுகிறது.

இல்லாவிடில், மித்ரா நிதியில் 2 கோடியே 58 இலட்சம் அரசாங்கத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை சமுதாயத்திற்குத் தெரிவிப்பாரா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) ஜோகூர் மாநிலத் தலைவர்  மோகன் எல்லப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மித்ராவிற்கு பொறுப்பேற்று மஇகா திருட்டுப்பட்டம் சுமக்க விரும்பவில்லை என்றும் விக்னேஸ்வரன் சொல்லியிருப்பது மிகவும் கண்ணியக் குறைவானது. மித்ராவின் செயல்பாடு குறித்த  அனைத்து தகவலும இணையப் பக்கத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ள நிலையில், தான் திருடி பிறரை நம்பாததைப் போல செடிக் நிர்வாகத்தில் இவர்கள் செய்ததை மனதில் வைத்து விக்னேஸ்வரன் பேசுகிறார் போலும்.

மஇகா நிர்வாகத்தில் இருந்த செடிக் பற்றி இந்திய சமுதாயத்திற்கும் அரசுக்கும் நன்றாகத் தெரியும்.  இப்போது மீண்டும் மஇகா வசம் மித்ரா சென்றால் அதற்கு குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையின் கதிதான் ஏற்படும்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு கருதி பொருத்தமான அமைப்புகள் மித்ராவினால் அடையாளம் காணப்பட்டு நிதி வழங்கும்போது, மானியத் தொகை முழுவதும் உடனே வழங்கப்படுவதில்லை. கட்டம் கட்டமாகத்தான் வழங்கப்படும்.

அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், சம்பந்தப்பட்ட இந்திய அமைப்புக்களுக்கான மூன்றாவது கட்ட நிதி வழங்கப்பட வேண்டிய நிலையில் கையிருப்பு நிதியை ஆண்டு இறுதியில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது நியதி.

பின் புது ஆண்டில் புதிய நிதிக் கணக்கு தொடங்கும்போது சம்பந்தப்பட்ட நிதி ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு முறையே ஒதுக்கப்படும் என்பதைப் பல கட்டங்களில் தெளிவாக விவரித்த பின்னரும் விக்னேஸ்வரன் இவ்வாறு பேசுவது அவர் வகிக்கும் கட்சித் தலைவர், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிகளுக்குப் பொருத்தமல்ல

இப்போது தேசியக் கூட்டணி மூலம் அதிகாரத்தில் இருக்கும் மஇகா, துணிந்து மித்ராவை நிர்வகிக்க வேண்டியதுதானே? அதற்குத் துணிவின்றி பின்வாங்குகிறார் விக்னேஸ்வரன்.

செடிக் காலத்தில் நிதி பங்கீடு பற்றி ஊருக்கும் உலகுக்கும் ஒன்றுமே தெரியாது. ஆனால், மித்ரா நிர்வாகம் அப்படி அல்ல; எல்லாவற்றையும் வெளிப்படையாகத் தனது இணையதளத்தில் தெரிவித்து வருகிறது. இருந்தும் இது போன்று பொன்.வேதமூர்த்தி மீதும், மித்ரா மீதும் வேண்டுமென்றே அவதூறு சொல்வது ஏற்புடையதல்ல என்று மோகன் எல்லப்பன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

3 Comments

  • Karu
    2020-05-21 21:17:40

    ஏற்கனவே, தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றி, மக்களைக் குழப்பவும் ஆதரவு தேட முயல்வதும் உண்மையைத் திரித்துக்கூறுவதும் பொறுப்பான தலைவர்க்கு அழகல்ல! ஐயம் ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட 'மித்ரா'விடம் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு அறிக்கை விட்டிருக்கலாம். திடீரென இவ்விஷயத்தைக் கிளப்புவதன் உள்நோக்கம் என்ன? 'செடிக்' போன்று ' மித்ரா'வை ஆக்கும் உத்தேசமா? உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அதைக் கொணரும் சாணக்கியமா? நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய அமைப்பை நாமே சிதைக்கக் கனவிலும் நினைக்க வேண்டாம். நல்ல தலைவராய் இருந்து ஆதரவைத் தெரிவியுங்கள்.இயலாதாயின் தன்னடக்கமாய் இருப்பதே சிறப்பு.

  • A.V.David
    2020-05-21 23:54:52

    இவர் ஒருவருக்கு வக்காலத்து வாங்குகிறார்.இவர் எந்த உலகத்தில் இருக்கிறார்.??

  • A.V.David
    2020-05-21 23:54:54

    இவர் ஒருவருக்கு வக்காலத்து வாங்குகிறார்.இவர் எந்த உலகத்தில் இருக்கிறார்.??

leave a reply

Recent News