loader
பினாங்கில் பல பகுதிகளில் வெள்ளம்!

பினாங்கில் பல பகுதிகளில் வெள்ளம்!

ஜார்ஜ் டவுன்: ஞாயிற்றுக்கிழமை (மே 17)இன்று காலை பெய்த மழையின் காரணமாக பினாங்கில் பல பகுதிகளில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தெலுக் பஹாங்கில், கோலா சுங்கை பினாங் மீனவர் கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட வீடுகள், கம்பங் சுங்கை மான், தமன் மங்கிஸ், புக்கிட் கெச்சில் மற்றும் சுங்கை பினாங் ஆகியவை 0.6 மீட்டர் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.

பாலிக் புலாவில் உள்ள தாமன் மங்கிஸ் இந்தாவில், வெள்ளப்பெருக்கின் போது 78 வயதான ஒரு பெண் தனது வீட்டில் சிக்கிக்கொண்டார். இது அப்பகுதியில் எட்டு வீடுகளைப் பாதித்தது. பிற்பகல் 2.39 மணியளவில், அந்தப் பெண்ணை பாலிக் புலாவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர்..

இதற்கிடையில், செபராங் பிறை தெற்குப் பகுதியில், தாமான் லீமா கொங்சி, கம்போங் சுங்கை பாவோங், பெடரல் சாலை வால்டோர், கம்போங் வால்டோர் மற்றும் கம்போங் மஸ்ஜித் பாரு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வெள்ள நீர் 0.1 முதல் 0.3 மீ உயரத்தை எட்டியது.

மத்திய செபராங் பிறையில், ஜலான் தெம்பிகாய் மற்றும் ஜலான் கெபுன் சிரே ஆகிய சாலைகள் 0.3 மீட்டர் வரை உயர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலத்திற்குள் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பினாங்கு வெள்ள தணிப்புக் குழுவின் தலைவர் ஜைரில் கிர் ஜோஹரி தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News