loader
கொரோனாவுக்கு மலேரியா மருந்து... அமெரிக்காவில் முதல்கட்ட சோதனை!

கொரோனாவுக்கு மலேரியா மருந்து... அமெரிக்காவில் முதல்கட்ட சோதனை!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளைத் தரலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் அந்தோணி பாசி, கொரோனா உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் பயன் தரக்கூடும் என சான்றுகள் இருந்தாலும், இதனைத் தீர்மானிக்க பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று கருதுகிறார்.

அந்த வகையில், கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட உள்ளது.

இதற்காக 2 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குறுகிய காலத்துக்கு மலேரியா மருந்து தரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன!

0 Comments

leave a reply

Recent News