loader
கொரோனா உலகம்: என்ன நடக்கிறது?

கொரோனா உலகம்: என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி நேற்று புதன் கிழமை நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36.59 லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.57 லட்சம் பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலகிலேயே கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மட்டும் 12,03,000க்கும் அதிகம் பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு 71,000க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5104 ஐ எட்டியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 206 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News