loader
பீதி  அடைய வேண்டாம்;   இதுவும் கடந்துபோகும்...  - டத்தோ ஸ்ரீ சுப்ரா

பீதி அடைய வேண்டாம்; இதுவும் கடந்துபோகும்... - டத்தோ ஸ்ரீ சுப்ரா

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே 5-

கோவிட்-19  பாதிப்பை உலகமே ஏதிர்நோக்கிவரும் நிலையில், தற்போது  மலேசிய அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுபாடு தளர்வு தொடர்பாக முன்னாள்  சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் .சுப்ரமணியம் தமிழ் லென்ஸுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி.

நீண்டகாலம் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம், சுகாதாரத் துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சை வழிநடத்திய  அனுபவம் மற்றும் மலேசியாவை அச்சுறுத்திய டெங்கி, இன்ஃபுளுவென்சா எச் .1என் 1 போன்ற நோய்களைக் கையாண்டு, அதைத் துடைத்தொழிக்கும் முயற்சிக்குத் தலைமையேற்ற அனுபவம் கொண்டவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா.

அரசாங்கத்தின் தற்போதைய முடிவு, அரசாங்கம் மற்றும் மருத்துவக் குழுவின் தற்போதைய நடவடிக்கையின் முக்கியத்துவம் போன்றவை குறித்து ஒரு மருத்துவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா என்ன சொல்கிறார்?

 

வாங்க பார்க்கலாம்....

 

கேள்வி: அரசாங்கத்தின் தற்போதைய முடிவு  சரியானதா? அல்லது தவறான அணுகுமுறையா?

 

"நடமாட்டக் கட்டுப்பாட்டை சரியான நேரத்தில் மலேசிய அரசாங்கம் அமல்படுத்தியது என்றே கூறவேண்டும். குறிப்பிட்ட அந்தச் சமய நிகழ்ச்சி தொடர்பான அறிகுறிகள் மலேசிய மருத்துவக் குழுவிற்கு மூன்று வாரம் கழித்துதான் தெரியவந்தது. உடனே நடவடிக்கையில் இறங்கினார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மலேசியா எடுத்த அதிரடி நடவடிக்கை, முன் எச்சரிக்கை நடவடிக்கை  மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால்தான் மற்ற நாடுகளைப் போல் காட்டுபாட்டை மீறிச் செல்லாமல் கட்டுப்படுத்த முடிந்தது நம்மால்.  

 

இப்படிப்பட்ட சுகாதாரப்பேரிடரில் ஒரு நாடு வெற்றிபெற மூலக்காரணம் அந்த நாட்டின் சுகாதார அமைப்புகளும் வசிதிகளும் மற்றும் செயலாக்கமும் தான்.  

 

இந்தக் கட்டமைப்பை மலேசியா பல ஆண்டுகள் செய்து வளர்ச்சி கண்டுள்ளது. இதை நாம் நம் மக்களிடம் தெரிவித்த காலத்தில் சிலர் நம்பினர்; பலர் நம்பவில்லை. ஆனால் இந்தப் பேரிடர் நமது மருத்துவ  வசதி அதன் கட்டமைப்பு மற்றும் நம் உள்நாட்டு மருத்துவர்களின் ஆற்றலை மக்களுக்கு நிரூபித்துள்ளது. அந்த வகையில் மலேசியர்களாக நாம் கொடுத்துவைத்தவர்கள்.

 

தற்போது அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வு முடிவுகள்,  அடிப்படை நோய்த் தாக்கத்தின் எண்ணிக்கை, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சில தயார்நிலைக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். நோயைக் கட்டுப்படுத்தி,  சிவப்பு மண்டல இடங்களில் நடமாட்டம் முடிவடைந்து, அங்கு சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. அதோடு அங்குள்ள பொது இடங்களில் நோய்க் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒன்றரை மாதம் மக்களை வீட்டில் இருக்கச் சொன்ன அரசாங்கம், இப்போது சில தளர்வுகளை வழங்கியுள்ளது என்றால், அனைத்தும் சரியான திட்டமிடலோடு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதற்காக மிகபெரிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அதோடு மலேசியா நோயில் இருந்தும் மீண்டுவரவேண்டும், பொருளாதாரச் சிக்கலையும்  சந்திக்கக்கூடாது. இதனால் பல நிறுவனங்கள் பாதிப்பு அடைந்து, பலர் வேலை வாய்ப்புகளை இழந்து, வறுமையின் பிடியில் சிக்கிகொள்ளக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்தத் தளர்வு நடவடிக்கைகளைச் செய்துள்ளது. 

நாம் இந்த இரண்டு சிக்கலில் இருந்து மீண்டு வரலாம், மக்களின் சுய கட்டொழுங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வுவயிலாக  அரசாக்கத்தின் இந்த முயற்சி வெற்றி பெறும்." 

கே: மக்களின் பீதி எப்போது குறையும்?

"அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். ஆனால் மிகப் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சில நாடுகளில் வாழும்  மக்கள் போல் மலேசிய மக்கள் அலட்சியம் காட்டவில்லை. கோவிட் பாதிப்பை நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையால், நாம் இந்தப் பேரிடரில் இருந்துமீண்டு வந்து  வெற்றிபெறுவோம். மக்கள் பீதி அடையாமல் தைரியத்தை வளர்த்துக் கொண்டு, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதோடு, குடும்ப வருமானத்தையும் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.. இதுவும் கடந்து போவோம். வெற்றி நமக்கே.'

கே: அரசாங்கத்திற்கு உங்களின் ஆலோசனை?

"தற்போது ஒரு நாளைக்கு சுமார் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேரை மருத்துவக்குழு சோதனை செய்கிறார்கள் . நல்ல முயற்சி. அந்த வசதிகள் இன்னும் இரட்டிப்பாக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

மேலும், எல்லை கட்டுப்பாடுகளை இன்னும் சில காலங்கள் தொடரவேண்டும் அது மலேசியர்களுக்கு நல்லது.  

மலேசிய சேவைத் துறையில் உள்ளவர்கள் திறமையானர்கள் என்பதை  நிரூபித்த அனைத்து முதல் நிலை சேவையாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!"

3 Comments

  • டிகே.மூர்த்தி
    2020-05-21 21:02:43

    டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் ஆய்வு சிறப்புக்குரியது. பாராட்டுகள்

  • டிகே.மூர்த்தி
    2020-05-21 21:03:56

    டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் ஆய்வு சிறப்புக்குரியது. பாராட்டுகள்

  • Sitha Narayanan
    2020-06-11 02:33:45

    மலேசியச் சுகாதார அமைச்சின் மேநாள் அமைச்சர் மாண்பமை டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா அவர்கள் கூறியுள்ள ஆலோசனைப்படி "எல்லைக் கட்டுப்பாடுகளை இன்னும் சில மாதங்கள்அல்லது காலங்கள் தள்ளிப் போடுவது நாட்டுக்கு நல்லது". DS Dr. சுபராவின் ஆலோசனை தீர்க்கத்தரினமானது என்றே நினைக்கிறேன். அன்புடன், சித. நாராயணன்.

leave a reply

Recent News