loader
பிரதமர் நேரலையில் என்ன சொன்னார்?

பிரதமர் நேரலையில் என்ன சொன்னார்?


இன்று ஆர்.டி.எம் நேரலையில் உரையாற்றிய பிரதமர் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்தார்.

பொருளாதாரம் சார்ந்த துறைகள் மே 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் நிபந்தனைகளுடன் அவை திறக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

ஜாகிங், சைக்கிளோட்டம், கோல்ஃப் மற்றும் 10 பேருக்கு மேல் இல்லாத சிறிய குழு ஓட்டம் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும்.

இருப்பினும், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள கால்பந்து, ரக்பி போன்ற அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது.

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், எந்த நாடும் பூஜ்ஜியத்தை எட்டுவது சாத்தியமில்லை என்ற உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள, பொது சுகாதார சேவையின் திறனை மேம்படுத்த வேண்டும். எனவே, சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகுவது என்று தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

விருந்துகள், திறந்த இல்ல உபசரிப்புகள், நோந்புத்திறப்பு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் துறை  கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை தொழுகைகள் உட்பட அனைத்து சபை கூடல்  நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. அதே நேரத்தில் மாநில எல்லை தாண்டிய பயணமும் அனுமதிக்கப்படாது. நோன்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் கிராமத்திற்குச் செல்ல அனுமதி இல்லை.

அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறையோடு உணவகங்கள் திறக்க அனுமதிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முடியும் என்றால், அதற்கு முதலாளிமார்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மேலும், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அரசு அறிவிக்கும் வரை திறக்கப்படாது என பிரதமர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News