loader
செலாயாங் பாரு மக்களுக்கு விடியலின்  ஆரம்பம் இயக்கத்தினர் உதவி!

செலாயாங் பாரு மக்களுக்கு விடியலின் ஆரம்பம் இயக்கத்தினர் உதவி!


செலாயாங் பாரு, ஏப்.30-

உலகையே உலுக்கி வரும் கோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம் சிரமப்பட்டு வரும் வேளையில், நடமாட்டக் கட்டுப்பாட்டினால் வசதி குறைந்த மக்கள் பெருமளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விடியலின் ஆரம்பம் இயக்கத்தினர் வசதி குறைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். 

முதற்கட்டமாக வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர். அதோடு பி40 பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்களைத் தேர்வு செய்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மளிகைப் பொருட்களை வழங்கி வருவதாக இயக்கத்தின் தலைவர் கண்ணன் பத்துமலை தெரிவித்தார். 

கடந்த வாரம் செலாயாங் வட்டாரத்தில் பல இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் அங்குள்ள மக்கள் பலர் சிரமப்பட்டு வருவதை அறிந்த தங்களின் இயக்கத்தினர், சம்பந்தப்பட்ட இலாகாவினருடன் கலந்து பேசி முதற்கட்டமாக 15,000 முட்டைகளைக் கொடுத்து உதவியதாகவும் அவர் சொன்னார்.

பசார் போரோங் செலாயாங், செலாயாங் மக்மோர் ஆகிய இடங்களிலும் மக்களுக்கு உதவி தேவை படுவதால் மேலும் 10,000 முட்டைகளை கொடுத்து உதவியதாக இயக்கத்தின் துணைத் தலைவர் யசோதராஜ் தர்மராஜூ கூறினார்.

இதனிடையே, பல அரசு சாரா அமைப்புகள் ஆங்காங்கே மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும் வரவேற்கக் கூடியது. ஆனால் அரசு தொடர்புடைய ஜேகேஎம் இலாகாவுடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

விடியலின் ஆரம்பம் இயக்கம் தொடக்கத்திலிருந்து அரசுடன் இணைந்தே அனைத்து பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கத்தில் உறுப்பியம் பெற்றுள்ள 50 உறுப்பினர் முயற்சியிலும், பல நல்லுள்ளங்கள் வழங்கிய உதவியாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடிந்தது.

வசதிகுறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்க ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இயக்கத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக யசோதராஜ் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News