loader
கொரோனா: 88 புதிய சம்பவங்கள்!

கொரோனா: 88 புதிய சம்பவங்கள்!

மலேசியாவில் நேற்று 88 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஓர் இறப்பும் பதிவாகியுள்ளது. இதனால் மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 பேர் ஆகும். மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,691 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய  சுகாதார இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 121 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அறிவித்தார். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,663 அல்லது 64.4 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது.

மலேசியாவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகள் 1,932 பேர் உள்ளனர்.

இவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News