loader
மே 12 வரை  நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு! - பிரதமர்

மே 12 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு! - பிரதமர்

கோலாலம்பூர் ஏப்ரல்-23

கோவிட்-19 பாதிப்பில் இருந்து மலேசியா இன்னும் முழுமையாக வெற்றிபெறாத நிலையில், ஏப்ரல் 28 வரை பிறப்பிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு விதி  வரும் மே 12 வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று அறிவித்தார். 

நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால் நிச்சயம் வெற்றிபெறுவோம் அதனால்தான் இந்தக் கட்டுபாடு நீட்டிக்கப்படுகிறது. எனவே நான் நேசிக்கும் மலேசிய மக்கள் நிலைமையைப் புரிந்து அதற்கேற்ப அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பார்கள் என தாம் நம்புவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் ஒத்துழைப்புதான் நாம் இப்போது அடைந்த அடைவுநிலைக்குக் காரணம். இன்னும் கொஞ்ச காலம் காத்திருங்கள் என மலேசிய மக்களை  அவர் கேட்டுக்கொண்டார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நோன்பை நாம் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடி கடைபிடிப்போம். இக்காலகட்டத்தில் மசூதி தொழுகை  மற்றும் நோன்புச் சந்தைக்குச் செல்ல முடியவில்லை என மக்கள் வருத்தப்படவேண்டாம்.
இது இறைவன் நமக்குக் கொடுத்துள்ள சோதனை. இதுவும் கடந்துபோகும்.

இந்த ஆண்டு நாம் வீட்டில் குடும்பத்துடன்  தொழுகையில் ஈடுபட்டு, நோன்பு கடமையைச் செய்து,  நாடு இந்த கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுவர இறைவனைப் பிரார்த்திப்போம் என பிரதமர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News