loader
நடமாட்டக் கட்டுப்பாடு மே 12 வரை நீடிக்கப்படலாம்!

நடமாட்டக் கட்டுப்பாடு மே 12 வரை நீடிக்கப்படலாம்!

கோலாலம்பூர் ஏப்ரல்-23

தற்போது 37 நாட்களாக  மலேசியா மக்கள் நடமாட்டு கட்டுப்பாடு விதியைப் பின்பற்றி வீட்டில் இருந்துவரும் வேளையில், ஏப்ரல் 28-ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட நடமாட்ட கட்டுபாடு விதி, இன்னும் 14  நாட்களுக்கு நீடிக்கப்படவேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடமாட்டக் கட்டுப்பாடு  மே 12 வரை நீடிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

இன்று இரவு  8 மணிக்கு மலேசிய பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின்  மக்களுக்கு சில தகவல்களை நேரலை வாயிலாகத் தெரிவிக்கவுள்ளார். 

இன்று அவரது அறிவிப்பு நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பாகவும், நோன்பு மாத விதிமுறைகள் மற்றும் பெருநாள் தொடர்பாகவும் அமையும் என கூறப்படுகிறது.

அதே சமயத்தில் ரோஹிங்யா அகதிகள் சர்ச்சை தொடர்பாகவும் பிரதமர்  பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில  தொழில் துறைகள் செயல்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அது தொடர்பான தற்போதைய தகவலையும் பிரதமர்  இன்று இரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News