loader
மருத்துவப் பரிசோதனையுடன்  இலவச உணவும் வழங்கும் மருத்துவர்கள்!

மருத்துவப் பரிசோதனையுடன் இலவச உணவும் வழங்கும் மருத்துவர்கள்!

கோல முடா: ஏப் 23

மருத்துவச் சோதனையுடன் இலவச அன்னதானத்தையும் வழங்கி வருகிறார்கள் ஹோமியோபதி டாக்டர்களான டாக்டர் வில்லியம் மற்றும் டாக்டர் டி நோவலன் இருவரும்.

கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் தொடர்பாக தங்களின் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பதுடன், வேண்டிய மருந்துகளையும் கொடுத்து ஆலோசனை கூறி வருகிறார்கள் இவர்கள்.

மக்கள் தங்களின் இல்லங்களில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினால், உணவுப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, சுமார் 400 பேருக்கு இலவசமாக மதிய உணவையும் வழங்கினர்.

கெடா மெர்போக் ம.இ.கா தொகுதி தலைவர், கிளைத் தலைவர்கள் மற்றும் இளைஞர் பகுதியுடன் களத்தில் இறங்கி மக்களுக்கு இச்சேவையைச் செய்கிறார்கள்.

இது குறித்து கருத்துரைத்த அவர்கள், நம் மக்களுக்குச் செய்ய வேண்டியது நமது கடமை என்றும், ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கட்டளைகளை மதித்து, இந்த இக்கட்டான நேரத்தில் பாகுபாடின்றி  அனைவருக்கும் அரசாங்கம் கொடுத்த உதவிகளுடன் மற்ற இதர உதவிகளையும் செய்து கொடுக்க முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனுக்கு தங்களின் பாராட்டையும், அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகளையும் அவர்கள் தெரிவித்துக்கொண்டனர்!

 

0 Comments

leave a reply

Recent News