loader
அது சுத்தப் பொய்! -  பிரபாகரன் குறித்து எட்மண்ட் சந்தாரா

அது சுத்தப் பொய்! - பிரபாகரன் குறித்து எட்மண்ட் சந்தாரா

கோலாலம்பூர்: ஏப்ரல் -21

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கும், டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் பரவியது.

இதற்குப் பதிலளித்த கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா...

"நேற்று  செலாயாங் பசார் போரோங்கில்   கோவிட்-19 தடுப்பு சம்பந்தமான முக்கிய கூட்டத்தை நான் தலைமை தாங்கினேன். இது அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர்,  அரச மலேசிய ராணுவப் படை, மலேசிய பாதுகாப்பு படையினருடனான ஒரு முக்கிய சந்திப்பு. இது ரகசியம் காக்கும் அரசு கூட்டம்.  அந்தக் கூட்டம் முடிந்து தேசிய சமூகநல இலாகாவுடன் ஒரு கூட்டத்தையும்  ஏற்பாடு செய்திருந்தோம்.  அப்போது அந்தக் கூட்டத்தின் நடுவே வந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினரிடம், நாங்கள் கூட்டத்தை முடிக்கவில்லை சற்று வெளியே காத்திருக்க முடியுமா என்று பணித்தேன். உடனே குரலை உயர்த்தி நானும் மக்கள் தேவைகளை பற்றிதான் பேச வந்தேன் என பிரபாகரன் சொன்னதும், பேசலாம் நான் கூட்டத்தை முதலில் முடித்துக்கொள்கிறேன் அதுவரை வெளியில் காத்திருக்குமாறு சொன்னேன். அவரை யாரும் தடுக்கவில்லை" என  தெரிவித்தார்.

ஆனால் , பிரபாகரன்  ஒரு வீடியோ செய்து  தன்னை கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கிறர்கள். நான் இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  மக்கள் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். அதனால் நான்  நேரில் வந்து, மக்கள் தேவைகள் பற்றி பேச வந்துள்ளேன். என்னை அரசியல் காரணமாகத் தடுக்கிறார்கள் எனக் கூறியிருந்தார். அது சுத்தப் பொய்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினரின் அவதூறு தொடர்பாக தாம் இன்னும் எந்த ஒரு போலீஸ் புகாரும் செய்யவில்லை. காரணம் எனது வழக்கறிஞரிடம் கலந்தாலோசித்து வருகிறேன். ஆனால் அவருடைய வீடியோ தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை இந்த  இக்கட்டான காலகட்டத்தில் அனைத்து தரப்பினருடன் இணைந்து  பணியாற்றுவதையே தாம் விரும்புவதாக துணை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News