loader

All News

“என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

************

"என்னங்க இது...
கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."

"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

 

***************


"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"

"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம்.

அதான் இப்படி வச்சுட்டாங்க!"

***************

மருந்து பாட்டிலை
கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?

டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்துத் தடவணும்னு சொன்னார்.

***************

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?

ஆபீஸ்லியா வீட்டிலியா...

 

***************

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்ப்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்குப் பதில் சொல்ல தெரியலை மேடம்...

அம்மா: அவனுக்கு ‘பொய்’ சொல்லவே தெரியாது சார் !

 

*************

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க!

 

 

செல்லம் உனக்குத்  தீபாவளிக்குச் சேலை எடுத்துத் தரவா? சுடிதார் எடுத்துத் தரவா?

உங்களுக்கு எது துவைக்க ஈஸியா இருக்குமோ அதை எடுத்துத் தாங்க!
 

                                    ***

 

உங்க உடம்பில் கோடிக்கணக்குல செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட சிம்கார்டு போட்டு பேச முடியாது... அதுதான் வாழ்க்கை!

 

                                    ***

 

கவுண்டமணி: ஏன்டா அந்த ஆளைத் திருப்பி அனுப்பிட்டே?

செந்தில்: அவர் 2019 காலண்டர் கேட்டாரு... நம்மகிட்ட 1000 காலண்டர்தான் இருக்கு.

கவுண்டர்:???!!!!

                                    ***

முடி கொஞ்சம் சின்னதா வெட்டி வுடுங்க அண்ணே....

எவ்வளவு சின்னதா?

பொண்டாட்டி கையில புடிக்க முடியாத அளவுக்கு!

                                    ***

 

ஏன்டா பூனைக்குக் காது வழியா பால் கொடுக்கிறே?

ஏன்னா.... அது வாயில்லா ஜீவனாச்சே?

 

                                    ***

 

டேய் மாப்ளே.... மரத்து மேல இருந்து பார்த்தா இன்ஜினியரிங் காலேஜ் பொண்ணுங்களா தெரியுறாங்கடா...

கொஞ்சம் கைய விட்டுட்டுப் பாரு மாப்ளே மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க!

 

                                    ***

 

பரிட்சையில ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே... வெட்கமா இல்லையா உனக்கு?

டீச்சர், சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும். பண்ணிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்!

 

                                    ****

மச்சி... நீ வாட்ஸப்ல இருக்கியா? பேஸ்புக்ல இருக்கியா?

மூடிட்டுப் போடா... நானே கஷ்டத்துல இருக்கேன்!

 

                                    ***

வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! 
காந்திஜி-non வயலினிஸ்ட்!!

தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படிச் சொல்றே? 
மயிலுக்குத் தமிழ் தெரியாதே!

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி...
நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடுறா!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? 
நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே!

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? 
தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? 
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.

எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? 
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... 

என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... 
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!?

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.

பொருள்: மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு பேரு வாங்கு..அது போதும்ல.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும் பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு பிடிச்சுருவாம்..
(சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல போல)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

பொருள்: அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும் காயத் திம்பானா வே..மனுசன்னா வாயில நல்ல வார்த்தை வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா

புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்

பொருள்: அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற..நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே..மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..செத்துத் தொலையேம்ல..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

பொருள்: வாயால வடை சுடாத மாப்ள..
சொன்னமாதிரி செய்யேம் பாப்போம்
😀😂😀😂😂😂

(எழுதியது யாருன்னு தெரியல... இருந்தாலும் நல்லா எழுதிருக்கேருவே.... நல்லாரும்... நல்லாரும்!)