loader

All News

(முகமூடி)

ஒரு பிரபல தொழிலதிபருக்கும், பிரபல  தனியார் வானொலி பெண் அறிவிப்பாளருக்கும் இடையில் தொடர்பு இருப்பதை அறிந்த அந்தத் தொழில்முனைவரின் மனைவி உச்சகட்டக் கோபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளத்தில் அந்த அறிவிப்பாளரை வறுத்தெடுக்கிறார் பாதிக்கப்பட்ட மனைவி. அவரோடு  சேர்ந்து அந்த மனைவியின் சமூக வலைத்தள நண்பர்களும் அந்த அறிவிப்பாளரை வறுத்தெடுக்கின்றனர். 

அதன் சில பதிவுகள் கீழே …

அதோடு அந்த அறிவிப்பாளர் செய்த கருத்துப் பதிவை வைத்து மீம்ஸ் செய்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் அந்தத் தொழில் அதிபரின் மனைவி.

இதனை முகமூடியின் பார்வைக்குச்  சிலர் அனுப்பி வைத்துள்ளனர். 

அந்தத் தொழில் அதிபர் யார்? அந்த அறிவிப்பாளர் யார்? என்பதை  முகமூடி நன்கு அறிவேன். ஒரு குடும்பம் சீர் குலையக் கூடாது என்ற காரணத்தினால், யார் பெயரையும் குறிப்பிடவில்லை.

சம்பந்தப்பட்டவர்கள்  இதோடு ஒதுங்கினால் நல்லது. ஒதுங்காவிட்டால் அடுத்து பெயர் புகைப்படத்துடன்  முகமூடிக்கு அனுப்பி வைப்போம் என, முகமூடிக்குத் தகவல் கொடுத்தவர்கள், அந்த அறிவிப்பாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

(மக்களுடன் முகமூடி)

2008 -ல் இருந்து தாப்பா நாடாளுமன்றத்தை தக்க வைத்துள்ள டத்தோ ஸ்ரீ சரவணன், இப்போது  ம.இ.காவின் வெற்றிபெற்ற ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில்  கடந்த பொதுத்தேர்தலில்  ஜீரோ வோட் ம.இ.கா பிரச்சாரத்தை நடத்திய தலைவரும், இப்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவருமான ஒருவர்  தாப்பா நாடாளுமன்றத்தைக் குறிவைத்துள்ளதாக ம.இ.கா  தலைமையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அவரின் கீழ் செயல்படும் அமைப்பு தாப்பாவில் மையமிட்டுள்ளதாகவும், ம.இ.கா தலைமையின் தகவல் கூறுகிறது. பூர்வக்குடி மக்களுக்குக் குரல் கொடுப்பதும், அந்த சீட்டுகாகத்தான் என்றும் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும்  முன்று ஆண்டுகள் உள்ள நிலையில், டத்தோ ஸ்ரீ சரவணனைத் தோற்கடிக்கும் நோக்கில் முழுமூச்சாக செயல்படுகிறாரா அந்தத் தலைவர்? என்பதுதான் இப்போதைய கேள்வியாய் இருக்கிறது. அரசியல் சுனாமியிலும் சரவணனுக்கு தோள் கொடுத்த தாப்பா நாடாளுமன்றத்தை அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.  அந்தத் தலைவருக்குத் தாப்பா மக்கள் மீது பாசமா? அல்லது அந்த நாடாளுமன்ற உறுப்பினருடன் தீராப் பாகையா? காத்திருப்போம்!

(மக்களுடன் முகமுடி)


தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளியேறும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நம் நாட்டு  கலைஞர் முகேன் ராவ் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு அவர் சென்ற சில வாரத்தில் அபிராமி என்ற நடிகை அவருடன் நட்பு வைத்துப் பழக ஆர்ம்பித்த காலகட்டத்தில் இருந்து, இணைய ஊடகங்களில் முகேன் ராவ் உறவினர் என்று கூறப்படும் பெண்ணின் பேட்டிகள் வெளிவரத் தொடங்கியது.
அதன் பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு பல  வெளிநாட்டு இணைய ஊடகங்கள்  அவரைப் பேட்டி எடுத்து வருகின்றனர். இப்போது அது வேற கோணத்தில் ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா மூலம் அரங்கேறுகிறது. முகேன் ராவ்-வின் தனிப்பட்ட விவகாரம் பொதுப் பஞ்சாயத்திற்கு வந்ததன் மூலக் காரணம், இப்படிப்பட்ட பேட்டிகளும், அப்பேட்டியைக் கொடுக்க முன்வந்துள்ள அவரின் குடும்பத்தினரும்தான்.
ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தைப் பொதுவில் பேசுவது, அவரின் எதிர்காலத்தைப் பாதிக்காதா? அவரை எதற்கு அங்கு அனுப்பி வைத்தீர்கள் மிளிர்வதற்கா? அல்லது அவமானப் படுத்துவதற்கா?  எதையும் சற்றுச் சிந்தித்துப் பேச வேண்டும். உங்கள் தரப்பு நியாத்திற்கான  விடை  அவர் அந்த நிகழ்சியை விட்டு வெளியேறிய பிறகுதான் கிடைக்கும். இப்போது கொடுக்கும் பேட்டிகளால் அல்ல என்பதைப் புரிந்துக்கொண்டால் சிறப்பு.
அவரைச் சூழ்ந்து கொண்டுள்ள வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள், மலேசிய நாட்டில் ஒருவர் இருக்கிறார் உங்கள் நாட்டில் தேடப்படும் ஒரு குற்றவாளி அவர் என்று சொல்கிறார்கள். அவர் இங்குள்ள இந்திய சமுதாயத்திற்கும் மலேசியர்களுக்கும் தலைவலியாக இருக்கிறார். அவரை நீங்கள் பேட்டி எடுக்கலாமே? ஏன் இந்திய சமுதாயத்தை சீண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் நாடு திரும்ப மறுக்குறீர்கள்?  நீங்கள் இங்கு தஞ்சம் புகுந்ததன் காரணம் என்ன? என்று பல கேள்விகளை அவரிடம் கேட்கலாமே? அதுதான் எல்லாரும் அறிந்துக்கொள்ள விரும்பும் முக்கிய விஷயம், விவகாரம். அந்த பெண்ணைக் கண்டுபிடித்து பேட்டி எடுத்த உங்களுக்கு, இவரைக் கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன? முதலில் அதைச் செய்யுங்கள் நீங்கள்!

(மக்களுடன் முகமூடி)

ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் திசை திருப்ப, இன்னொரு பிரச்னையைக் கிளப்புவது அரசியல் பாணி.

சமீபத்தில் மெட்ரிகுலேசன் விவகாரத்தில் வெறும் 1212 இடங்கள் மட்டும்தான் இந்திய  மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல், இந்திய சமுதாயத்தினரின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரம், எதிர்ப்பலையை உருவாக்கிய குறுகிய காலத்தில், காட் விவகாரம் தற்போது கிளப்பி விடப்பட்டுள்ளது .
எனவே, அனைவரது கவனமும் தற்போது காட் மீது  திசைதிருப்பப்பட்டு, மெட்ரிகுலேசன் விவகாரம் மறைந்துள்ளது. 
அதனால, கொஞ்சம் ஊஷாரா இருங்க மக்களே... இரண்டு விவகாரத்திலும் கவனம் செலுத்துங்கள். இல்லை என்றால், மெட்ரிகுலேசன் விவகாரம் மறக்கடிக்கப்படும்!

(மக்களுடன் முகமூடி)

 

 

அமைச்சர் வேதமூர்த்தி சமீபத்தில் தமிழ் நாளேடுகள் சிண்டு முடிக்கும் வேலையைப் பல ஆண்டுகளாகச்  செய்து வருவதாகச் சொன்னார். அது முற்றிலும் உண்மை. அவர் அரசாங்கத்தை நெருங்குவதற்காகப் பல வகையில் சிண்டு  முடிக்கும் வேலையைத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தன. அதில் ஒன்றுதான் அவரின் 5 ஆண்டு கால செயல்திட்டம் வெற்றிபெற  நடத்தப்பட்ட உண்ணாவிரதம்.

அதன் பின், அவரது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றிபெற்று,  2013 ஏப்ரல்  18-ஆம் தேதி, அப்போது அவர் சொன்னது போல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தேசிய முன்னணி அரசுடன். அதனையும் சிண்டு முடிச்சி தமிழ்ப் பத்திரிகைதான்  எழுதியது.

அதன் பின் சில மாதங்கள்  அமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்.  அதையும் சிண்டு முடிச்சி, தமிழ்ப் பத்திரிக்கைகள்தான் எழுதியது.

பின் துன்னோடு கைகோர்த்து 'ஸீரோ வோட் ஃபார் பி.என்'  என்ற பிரச்சாரத்தை எழுப்பினார். அதையும் தமிழ்ப் பத்திரிகைகள் சிண்டு முடிச்சி எழுதியது. இப்படித் தமிழ்ப் பத்திரிகைகள் சிண்டு முடிச்சு எழுதித்தான், இவர் மீண்டும் அமைச்சர் ஆகிவிட்டார். அவர் சொன்னதே உண்மை.

அப்போது உங்களுக்குச் சுதந்திரமாக  வேலை செய்யமுடியவில்லை எனப் பதவியை ராஜினாமா செய்தீர்கள். இப்போது  நல்ல சுதந்திரம் இருக்கு என்று நம்புகிறோம். அதனால்தான் இன்னும் ராஜினாமா கடிதம் பிரதமரைச் சென்றடையவில்லை.

ஆகையால், மாண்புமிகு அமைச்சர் அவர்களே... நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள அந்த ஜந்தாண்டு செயல்திட்டங்கள்  என்ன என்பதை, ஒன்றன் பின் ஒன்றாக இந்த முகமூடி வெளியிடுகிறேன்.
சிண்டு முடிக்க அல்ல, ரொம்ப நாளாகக் கிடப்பில் இருக்கும் கடமையைச் செய்ய.

நீங்கள் சொன்ன சரித்திரப்பூர்வமான அந்தச் செயல்திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வியோடு....

'உங்களுக்குப் பதில் சொல்ல அவசியம் இல்லை. எனக்கு  வேலை கொடுத்தவர்  துன்' என்று மீண்டும் பதில் கொடுத்து மௌன  விரதத்தைத் தொடராதீர்கள்....
பல ஆண்டுகள்  ஓய்வில் இருந்த பிரதமருக்கு, மீண்டும்  வேலை கொடுத்தது மக்கள்தான்... நீங்கள் சொன்னதுபோல் உங்களுக்கு வேலை கொடுத்தது பிரதமராக இருந்தாலும், நீங்கள் இருவரும் மக்கள் சேவகர்கள் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.
ஆகையால் மக்களுக்காக நீங்கள் முன்பு  செய்த சரித்திரப்பூர்வ செயல்திட்டதிற்கு, நீங்கள் எந்தளவிற்குத் தயாராகிவிட்டீர்கள் என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.

செயல் திட்டத்தின் முதல் அங்கம்:

1. இடம்பெயர்வுக்கு ஆளான தோட்டத் தொழிலாளர்களை முன்னேற்றமடையச் செய்தல்.

1.1 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவது.

1.2 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடமைத் திட்டம்.

மற்றவை அடுத்த  முறை....
அதுவரை

(மக்களுடன் முகமூடி)

Recent News