loader

All News

நினைவு நாள் கட்டுரை.

(கரிகாலன்)

'மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும்  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம், இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர்  விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்பட்டார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதியை காந்தி ஜெயந்தியாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை ஒவ்வொரு இந்தியனும் அறிந்திருப்பது அவசியம்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள  போர்பந்தர் என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள்  பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது,  வெள்ளையர் இல்லை என்ற காரணத்தால், பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் காந்தி இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தி, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல் கொடுக்கவும், 1919இல் இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்பதற்கு தனது மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தினார்.ஆதலால் இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 இல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த அசம்பாவித நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா? எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் தேதி, அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், இது தொடர்பான போராட்டமும் தீவிரம் அடைந்து, காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்பு வரியை திரும்பப் பெற்றுக் கொண்டனர். உப்பு சத்தியாகிரகம் என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காந்தியைப் பெரிதும் பாதித்தது.

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில், நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தங்களின் முரட்டுக் கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள், உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகளாக நீடித்து நிலைத்திருக்கும்!

பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பாட்டாளிகளின் ஒன்றுகூடும் நிகழ்வு வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
'சுகமான நினைவுகள்' என்ற தலைப்பில் காலை 11.00 மணி தொடங்கி, மாலை 6.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்.
பாங்கி புக்கிட் துங்கு தோட்டத்தின் இளைஞர்கள் ஏற்பாட்டில், பாங்கி சோமசுந்தரம் செல்லையா தலைமையில், 'பாங்கி மண்ணின் மைந்தன்' என்ற  குழு அமைக்கப்பட்டு , ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில், சிறப்பு மலர் ஒன்றையும் இக்குழுவினர் வெளியீடு செய்யவுள்ளனர். 

பாங்கி துங்கு தோட்டத்தின் சிறப்பு அம்சங்களையும், வரலாற்றினையும் கூறும் விதமாக வெளியிடப்படும் இந்தச் சிறப்பு மலர், சுமார் 100 பக்கங்களில் வண்ணத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டம் சார்ந்த பல அரிய புகைப்படங்களையும் தொகுத்து இம்மலரில் இடம்பெறச் செய்துள்ளனர். தோட்டத்துத் தலைவர்களின் சிறப்பியல்புகள், தோட்டத் திருவிழா, தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், இறந்தவர்களின் நினைவலைகள் என தோட்டம் சார்ந்த அனைத்தும் இம்மலரில் தொகுத்து வழங்கப்படுவதால், பொக்கிஷமாக இம்மலர் அமையும் என்பதோடு, நிகழ்வின் முத்தாய்ப்பாகவும்இருக்கும் என்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

மேலும், தோட்டத்தில் இருந்த மூத்தோர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமையவிருப்பதால், பாங்கி புக்கிட் துங்கு தோட்டத்தின் சுகமான நினைவுகளைப் பெருமையோடு சுமந்து செல்ல, பாங்கி புக்கிட் துங்கு தோட்டப் பெருமக்கள் திரளாகக் கலந்துகொள்ளும்படி பாங்கி மண்ணின் மைந்தன் இயக்கத் தலைவர் சோமசுந்தரம் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்புக்கு:014-6344062

Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ‘Art of Living’ என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்று ஆண்டுகள் பல கடந்துவிட்டன.

புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது.

அதில் இரு மத போதகர்களுமே மக்களின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளித்தனர்.

அதன் சில பதில்கள் இதோ....

டாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென்ஆப்பிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் ‘Peace TV’ என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் Art of Living (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு, பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றி கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.

நமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் ‘டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்’ நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

முதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் இந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார். இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.

ஹிந்து வேதங்களும் திருக்குர்ஆனும் சொல்லும் கடவுள் கொள்கை ஒன்றே!
– டாக்டர் ஜாகிர் நாயக்

 

திருக்குர்ஆனின் 3வது அத்தியாயமான ஆலஇம்ரானின் 64வது வசனத்தை பீடிகையாகப் போட்டு தனது கருத்துக்களை தொடங்கினார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: “(நபியே! அவர்களிடம்) “வேதத்தை உடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறி விடுங்கள்.”

“திருக்குர்ஆன் பொதுவான விஷயத்தின் பக்கம் மக்கள் ஒன்றுசேர வேண்டும்” என்று கூறுகிறது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தை கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள விஷயங்களில் பொதுவானதைப் பற்றி அறிய முற்படுவோம் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜாகிர் நாயக், “முதலில் ஹிந்து என்றால் யார்? முஸ்லிம் என்றால் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்” என்று தனது உரையைத் தொடங்கினார்.

ஹிந்து என்ற பதம் பூகோளம் தொடர்பானது; சிந்து நதிக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஹிந்து என்ற பெயர் உண்டு. இதேபோல் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களுக்கும் இந்தப் பெயர் உண்டு. மிக அதிக எண்ணிக்கையிலான வரலாற்று ஆய்வாளர்கள், அரபுகள்தான் முதன் முதலில் ஹிந்து என்ற பதத்தைப் பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். இந்தியாவிற்கு முஸ்லிம்கள் வருவதற்கு முன்பாக ஹிந்து என்ற பதம் அறியப்படாத ஒன்றாக இருந்தது என்று மதங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Religions) 6-ம் பாகம் கூறுகிறது. ஜவஹர்லால் நேருவும் இந்தப் பதம் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டதுதான் என்று கூறுகிறார். 19-ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக ஆங்கிலேயர்கள் இந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள். இந்தியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர் அல்லாத பல இன மக்களை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஹிந்து மதம் என்று குறிப்பிடுவதை விட ‘சனாதான தர்மம்’ என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். சுவாமி விவேகானந்தர் கூட ஹிந்துக்களை ‘வேதாந்திகள்’ என்று அழைப்பதே சரியானது என்று குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் கோடிட்டுக் காட்டினார்.

‘இஸ்லாம்’ என்றால் சாந்தி, அமைதி என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிவதின் மூலம் கிடைக்கும் அமைதிக்குத்தான் ‘இஸ்லாம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சாந்தியைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெளிவுபடுத்தினார்.

அடுத்ததாக, புனித வேதங்கள் என்பதற்கான விளக்கங்களை அவர் அளித்தார். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, வேதங்களை இருவகையாக பிரிக்கலாம். முதல் வகை ஸ்ருதிகள், இரண்டாம் வகை ஸ்மிருதிகள். ஸ்ருதிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வேதங்கள், மற்றொன்று உபநிஷத்துகள். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்ம வேதம் ஆகியவை நான்கு வேதங்களாகும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர், “வேதங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை” என்று கூறுகிறார்கள். ஆனால், வேறு சிலர் அவை 4,000 ஆண்டுகள் பழமையானதுதான் என்று குறிப்பிடுகிறார்கள். வேதங்கள்தான் மிகப்புனிதமானது என்றும், வேதங்களுக்கும் மற்ற ஹிந்து புனித நூல்களுக்குமிடையே முரண் ஏற்படும்போது வேதங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

உபநிஷத்துகளுக்கு ‘குருவின் அருகில் அமர்ந்து பெற்றவை’ என்று பொருள். 700க்கும் மேற்பட்ட உபநிஷத்துகள் உள்ளன. ஆனால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 18 உபநிஷத்துகளைத் தொகுத்து ‘உபநிஷக் கோட்பாடுகள்’ என்ற நூலை தொகுத்தளித்தார்.

ஸ்மிருதி என்றால், ‘கேட்பது, நினைவில் கொள்வது’ என்று பொருள். ஸ்மிருதிகள், ஸ்ருதிகளை விட புனிதத்தன்மையில் தாழ்ந்தவையாகும். அவை இறைவனின் வார்த்தைகளும் அல்ல என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். ஸ்மிருதிகளுக்கு ‘தர்ம சாஸ்திரங்கள்’ என்றும் பொருள் உண்டு. புராணங்களும் இதிகாசங்களும் ஸ்மிருதிகளில் அடங்கும். பிரபலமான இதிகாசங்கள் இரண்டு உள்ளன. அவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும். பகவத் கீதை, மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளில் உள்ளவற்றில் வேதங்கள் தான் ஆதாரப்பூர்வமானதாகும் என்று டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து புனித நூல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.

அடுத்து, இஸ்லாமியப் புனித நூல்களைப் பற்றிய ஒரு பார்வையை டாக்டர். ஜாகிர் நாயக் தனது உரையில் எடுத்துரைத்தார்.

உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்த வழிகாட்டுதல்களில் இறுதியாக வந்தது ‘திருக்குர்ஆன்’ ஆகும். திருக்குர்ஆன் மனிதகுலம் முழுவதற்கும் வந்த ஒரு வழிகாட்டியாகும். திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளப்பட்டதாகும். ஆனால், திருக்குர்ஆனைப் பொருத்தவரை, அது அனைத்து மக்களுக்கும், எல்லா காலகட்டத்திற்கும் அளிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர். ஜாகிர் நாயக் இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் 14:1, 14:52 மற்றும் 39:41 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டினார். திருக்குர்ஆனுக்கு அடுத்ததாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. நபிகள் நாயகத்தின் சொல், செயல், மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கி இருக்கும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கின்றன என்று கூறினார்.

தனது உரையின் அடுத்தக் கட்டத்தில், கடவுள் கொள்கையைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்துரைக்க ஆரம்பித்தார். “இந்த பரிமாற்றத்தை நான் சொல்வதும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சொல்வதும் வேதங்களில் சொல்லப்பட்டவைக்கு இசைவாக அமைய வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

சாதாரண ஹிந்துக்களிடம், கடவுளர்கள் எத்தனை? என்று கேட்டால் ‘ஆயிரக்கணக்கான கடவுளர்கள் உள்ளனர்’ என்று கூறுவார்கள். ‘உலகில் உள்ள அனைத்தும் கடவுள்’ என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், மரம், செடி, கொடி, பிராணிகள், விலங்குகள் முதலியவற்றையும் கூட கடவுள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கற்றறிந்த ஹிந்துக்களைக் கேட்டால், ‘கடவுள் ஒன்றுதான்’ என்று சொல்வார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை ‘கடவுள் ஒன்றுதான்; உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது’ என்று சொல்வார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடவுள் கொள்கையில் உள்ள முக்கிய வேறுபாடு, உலகில் உள்ள அனைத்தும் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள், ஆனால் முஸ்லிம்களோ, உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடுகிறார்கள். இதை மிக சுருக்கமாக டாக்டர் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தனக்கே உரிய பாணியில், இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு (‘) ஒரு மேற்கோள் புள்ளிதான் என்று விளக்கினார். அதாவது, முஸ்லிம்கள் (Everything is God’s) என்று சொல்கிறார்கள், ஆனால் ஹிந்துக்கள் (Everything is God) என்று குறிப்பிடுகிறார்கள் என்றார். இந்த சிறிய வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சியை மேற்கொண்டால், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒருமைப்பாடு ஏற்பட வழிபிறக்கும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்தார். இதைக் களைவதற்கான வழி வேதங்களில் உள்ளது என்று சொன்ன அவர், பல்வேறு ஹிந்து வேதங்களை மேற்கோள் காட்டி, அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் தன்மைகளும், திருக்குர்ஆன் சொல்லும் கடவுளின் தன்மைகளும் ஒன்றுபோல் இருப்பதை சுட்டிக்காட்டி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் டாக்டர் ஜாகிர் நாயக்.

சந்தோக்கிய உபநிஷத், யஜுர் வேதம், ரிக் வேதம், பிரம்மசூத்ரா என்று பல ஹிந்து புனித நூல்களில், ‘கடவுள் ஒன்றுதான்; கடவுளுக்கு பெற்றோர் இல்லை; கடவுளுக்கு ஒப்பாக யாதுமில்லை’ போன்ற இஸ்லாம் கூறும் ஏகதெய்வ கொள்கை உள்ளதை ஆதாரங்களுடன் டாக்டர் ஜாகிர் நாயக் சமர்ப்பித்தார்.

பகவத் கீதை: ‘சிந்தனையைப் பறிகொடுத்தவர்கள் தான் சிலைகளை வணங்குகிறார்கள்’
பகவத் கீதை: ‘நான் யாராலும் பெற்றெடுக்கப்படவில்லை’
யஜுர் வேதம்: ‘கடவுளுக்கு நிகராக படைக்கப்பட்டவைகளை வணங்குபவர்கள் இருளில் நுழைகிறார்கள்’
ரிக் வேதம்: ‘கடவுள் ஒருவர்தான்; அவனையே வணங்க வேண்டும்; அவனையே புகழ வேண்டும்’

இவ்வாறு எண்ணற்ற மேற்கோள்களைக் காட்டிய டாக்டர் ஜாகிர் நாயக், ‘ரிக் வேதத்தில் கடவுளுக்கு அளிக்கப் பட்ட பேர்களில் ஒன்று பிரம்மா. பிரம்மா என்றால், படைப்பாளன் என்று பொருள், இதற்கு அரபியில் சொல்ல வேண்டு மென்றால் ‘ஃகாலிக்’ என்று குறிப்பிடலாம் என்று தெரிவித்தார். இதேபோல், இன்னொரு பெயரான விஷ்ணுவுக்கு ‘ரட்சகன்’ என்று பொருள். இதை அரபியில் ‘ரப்பு’ என்று குறிப்பிடலாம் என்றார்.

சுருக்கமாக வேதங்கள் சொல்லும் கடவுள் ‘ஏகன்’ என்றும், அவன் இணை, துணையற்றவன் என்றும் ஆதாரங்களோடு விளக்கிவிட்டு, திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக திருக்குர் ஆனின் 112வது அத்தியாயமான சூரத்துல் இக்லாஸை மேற்கோள் காட்டினார் டாக்டர் ஜாகிர் நாயக்.

கடவுள் என்று ஏற்றுக்கொள்வதற்கு நான்கு சோதனைகளை திருக்குர்ஆன் வைத்துள்ளது. அவை, 1) கடவுள் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் 2) தேவையற்றவனாக இருக்க வேண்டும் 3) எவரையும் பெற்றெடுத்திருக்கக் கூடாது, எவராலும் பெற்றெடுக்கப்பட்டிருக்கவும் கூடாது, 4) ஒப்பாக யாரும் இருக்கக் கூடாது.

இந்தியாவில் சிலர் பகவான் ரஜ்னிஷை கடவுள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த சோதனைகள் எதிலும் ரஜ்னிஷ் வெற்றிபெறவில்லை. ரஜ்னிஷ், மத்தியப் பிரதேசத்தில் 11-12-1931ல் பிறந்து 19-01-1990ல் மரணமடைந்ததார் என்பது உண்மை. அமெக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் வைத்தபோது, மெதுவாக சாகவைக்கும் நஞ்சு அவருக்கு கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 21 நாடுகள் அவருக்கு விசா அளிப்பதற்கு மறுத்துவிட்டன. கடவுளுக்கு இத்தகைய நிலை ஏற்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டார்.

கடவுளை அல்லாஹ் என்று முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். இந்தப் பதமும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் பதத்தை பன்மையாக்க முடியாது, மேலும் எந்தவகையிலும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் தன்மையுடையதாக மாற்றவும் முடியாது என்று விளக்கமளித்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.

“இந்த விவாத அரங்கிற்கு ஏற்பாடு செய்தபோது, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் தனது உரைகளைப் பற்றியும் நூற்களைப் பற்றியும் எனது கருத்தை அறிய விரும்புவதாகக் கூறினார்கள். அவர் எழுதிய Hinduism and Islam – The Common Thread (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாம் – ஒரு பொதுவான இழை) என்ற நூலையும் அவரது வீடியோ பேச்சு ஒன்றையும் நான் பார்த்தேன். அதில் உள்ள பல விஷயங்களில் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில், பல விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளேன்” என்றார் நாயக்.

“ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது ஆதாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை நான் முற்றிலுமாக வரவேற்கிறேன். அதேபோல், ஆழமாக அதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கும் நான் உடன்படுகிறேன். Similarities between Hinduism and Islam (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்திற்கு பொதுவானவை) என்ற த